தமிழ்நாட்டின் 2-வது பெரிய காய்கறி மார்க் கெட்டாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் திகழ்ந்து வருகிறது. இங்கு
திண்டுக்கல் மாவட்ட தேவைக்கு போக மற்ற காய்கறிகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு தினமும் நூறுக்கும்
மேற்பட்ட லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக பண்டிகை காலங்களில் கேரளா வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குவிந்து விடுவார்கள். தேனி, சின்னமனூர், உடுமலை, கர்நாடகா, மகராஷ்டிரா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயங்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக அதாவது தீபாவளிக்கு முன்பு இருந்தே வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. முன்பு தரமான சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.35-க்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக படிப்படியாக தற்போது ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல பெரிய வெங்காயம் ரூ.15-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.25-க்கு விற்கப்படுகிறது. வெங்காய விலை கிடுகிடு உயர்வினால் பெண்களின் கண்களில் வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீர் வருகிறது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வெங்காய வியாபாரிகள் கூறும்போது, கடந்த சில நாட்களாக வெங்காய வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் வெங்காய விலை உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க கர்நாடகாவில் இருந்து ஒட்டுவெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒட்டுவெங்காயம் கிலோவுக்கு 16ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை யாகிறது. போதுமான மழை இல்லாததால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இன்னும் ஒருசில வாரத்தில் வெங்காயத்தின் வரத்து அதிரிக்கும் அப்போது விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

Post a Comment