பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு
ரூ.3 கோடியே 12 லட்சம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் மேலும் கூறியதாவது:-
பெரம்பலூர்
மாவட்டம் சிறிய வெங்காய சாகுபடி செய்வதில் மாநிலத்திலேயே முதலிடம்
வகிக்கின்றது. சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர் மாநாட்டில் தமிழக
முதலமைச்சர் சிறிய வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தி
விளைச்சலை அதிகப்படுத்திட மானிய உதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
அதனடிப்படையில்
பெரம் பலூர் மாவட்டத்திற்கு சிறப்பு திட்டமாக சிறிய வெங்காயம் பயிரிடும்
விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் 2011-2012ம்
ஆண்டிற்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 2ஆயிரத்து
500 ஹெக்டேரில் சிறிய வெங்காயம் பயரிட ரூ.3கோடியே 12லட்சம் மானியம் வழங்க
நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின்
அடிப்படையில் ஒரு ஹெக்டரில் சிறிய வெங்காயம் பயிரிட ரூ.12 ஆயிரம் 500
மானியம் வழங்கப் படும். இத்திட்டத்தின்கீழ் பயன் பெற விவசாயிகள் தங்கள்
விவசாய நிலத்திற்கான சிட்டா அடங்கல் பாஸ் போர்ட் அளவு புகைப்படம் குடும்ப
அட்டை நகல் ஆகிய வற்றுடன் வட்டார உதவி தோட்டக்கலை இயக்குநர் தோட்டக்கலை
அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் ஆகியோரிடம் விண்ணப்பிக்க
வேண்டும்.
இத்திட்டம் இந்த நிதியாண்டில்
(2011-2012) மேற்கொள்ளப்பட உள்ளதால் விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்க
வேண்டும். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை துணை இயக்குநர் (94871 56511)
(04328 -291099) தோட்டக்கலை அலுவலர் தொழில்ட்பம் (94430 01793) தோட்டக்கலை
உதவி இயக்குநர் (ஆலத்தூர்) (94429 49688 மற்றும் 04328-267033) உதவி
வேளாண்மை அலுவலர் பெரம்பலூர் (94426 32486) தோட்டக்கலை அலுவலர்
வேப்பந்தட்டை (04328- 264123) தோட்டக்கலை அலுவலர் வேப்பூர் (91500 17351)
ஆகிய எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். இவ்வாறு கலெக்டர் தரேஸ்
அகமது தெரிவித்துள்ளார்.
Post a Comment