பொங்கலூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை
வீழ்ச்சி அடைந்துள்ளதால் பொங்கலூர் பகுதி விவசாயிகள் கவலை அடைந்து ள்ளனர்.
திருப்பூரை அடுத்த பொங்கலூர் சுற்றுவட்டார பகுதி காய்கறி பயிர்களும், சின்னவெங்காயம், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
குறிப்பாக காட்டூர், வாவிபாளையம், கெங்க நாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படு கின்றன.
பயிர் செய்த நாளிலிருந்து சுமார் 110 நாட்கள் கழித்து வெங்காயம் அறுவடை செய்யப்படுகின்றது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு பெரிய வெங்காயம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு வரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10-க்கும் மேல் வியாபாரி களால் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு ரூ.4 முதல் ரூ.6 வரை மட்டுமே விலை போவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொங்கலூர் பகுதி விவசாயி மாணிக்கம் கூறியது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வெங்காயம் மிக அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், தற்போது சுமார் 3 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பயிர் செய்யப்படுகின்றன. இதற்கு ஆட்கள் பற்றாக்குறை முக்கியக்காரணம். இதனால் கிடைக்கும் ஆட்களுக்கும் அதிக கூலி, பராமரிப்பு செலவு அதிகரிப்பு என ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது.
ஆனால், அதற்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை. தென்காசி பகுதிகளிலிருந்து பெரிய வெங்காயம் திருப்பூருக்கு அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதும் இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். இதற்கிடையில், ஏக்கருக்கு சராசரியாக 12 முதல் 15 டன் வரை பெரிய வெங்காயம் சாகுபடி செய்யபட்டு வந்த நிலையில், தற்போது நோய் தாக்குதல் காரண மாக சுமார் 2 டன் அளவுக்கு மகசூலும் குறைந்து விட்டது. எனவே பெரிய வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்கவும், வெங்காயம் சாகுபடியை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Post a Comment