தாராபுரம் : சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது கிலோ
ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்,
குண்டடம், கோவிந்தாபுரம், சின்னப்புத்தூர், நாரணாபுரம், மேட்டுக்கடை,
சூரியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம்
தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பிஏபி வாய்க்கால்
அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில் தண்ணீர் திறந்து
விடப்பட்டுள்ளதால், விவசாயிகள் வெங்காய சாகுபடியை நிறுத்தி விட்டு நெல்
மற்றும் மக்காச்சோள சாகுபடிக்கு மாற தொடங்கினர்.
இதனால், கடந்த பருவத்தில் மகசூல் செய்யப்பட்ட வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வந்து கொண்டுள்ளது. வரத்து குறைந்ததால், விலையும் அதிகரித்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் கடந்த வாரம் ரூ.35க்கு விற்பனையானது. தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது. ஜனவரி மாதம் மீண்டும் வெங்காய உற்பத்தி துவங்க உள்ளது. எனவே, அடுத்து வரும் 2 மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.

Post a Comment