ஈரோடு: ஏற்றுமதி அதிகரிப்பாலும், வாட்டி வதைத்த பருவமழையால் தமிழகத்தில்
சின்ன வெங்காயம் வரத்து குறைந்து, சின்ன வெங்காயம் கிலோவுக்கு, 20 ரூபாய்
உயர்ந்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் சின்ன வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில், 2010-11ல் வெங்காய சாகுப்படி பரப்பு, 33 ஆயிரத்து, 800 எக்டேர் இருந்தது. இதில், சின்ன வெங்காயத்தின் பரப்பளவு, 70 சதவீதம் பங்களிப்பு இருந்தது. கடந்தாண்டைவிட, நடப்பாண்டு வெங்காயம் உற்பத்தி, அதிகரித்தது. மண்டிகளில் வரத்து அதிகரிப்பால், ஜனவரி முதல், ஏப்ரல் வரை, சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோவுக்கு, ஏழு முதல், 12 ரூபாயாக இருந்தது.
மத்திய அரசு வெங்காய விலை குறைப்பை தடுப்பதற்காகவும், ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, ஜூன் மாதம் நீக்கியது. இதன் மூலம் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிப்பால், சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது.
தமிழகத்தில் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து விட்டது. மாநிலம் முழுவதும் பெய்ந்த பருவமழையால், விளைச்சள் கடுமையாக பாதித்துள்ளது. இருப்பில் வைத்துள்ள சின்ன வெங்காயம், மழையால் குடோன்களிலேயே பாதி அழுகி விடுகிறது. தற்போது வெங்காயம் தேவை அதிகம் உள்ள நிலையில், தட்டுப்பாட்டால், விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு, வெங்காய மொத்த வியாபாரிஷேக்மன்சூர் கூறியதாவது:
கர்நாடகா மாநிலம், பெல்லாரி, ஆந்திர மற்றும் தமிழகத்தில் பல்லடம், தாளவாடி, ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. ஜூலை மாதத்தில் இருந்து இலங்கைக்கு மட்டும் ஏற்பதி வாய்ப்பு அதிகரித்து, சீரான விலை ஏற்றம் இருந்தது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டில் பெய்ந்து வரும் மழையால், வெங்காயம் விளைச்சல் பாதித்துள்ளது. குடோன்களில் இருப்பு வைத்த சின்ன வெங்காயம், மழையால் பாதி அழுகிவிடுகிறது. இதனால், தமிழகத்தில் வரத்து குறைந்து, விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம், சின்ன வெங்காயம் கிலோ, 20 ரூபாய்க்கு விற்றது, 20 ரூபாய் அதிகரித்து, 35 முதல், 40 ரூபாய் வரை சந்தையில் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ, 12 ரூபாய்க்கு விற்றது, எட்டு ரூபாய் உயர்ந்து, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மேலும் விலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment