வரத்து குறைவாக உள்ளதால், சின்ன வெங்காயம் விலை, கிலோ 40 ரூபாய் வரை
உயர்ந்துள்ளது. இதே போல், வரும் நாட்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின்
விலையில் மாற்றும் இருக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.சென்னையில்
நீலம் புயல் கரை கடந்ததால், மழை பெய்தது. இதனால், தக்காளி, வெங்காயம்
உள்ளிட்ட, சில காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் வரத்தும்
குறைந்தது. கடந்த வாரம், கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவாக விற்ற,
தக்காளியின் விலை ஏற்றமடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக நல்ல தரமான
தக்காளி, கிலோ 16 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் (நாட்டுக்காய்) 40
ரூபாய் வரை போனது.
பெரிய வெங்காயம் 16-20 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள அனைத்து காய்கறிகள் விற்பனை சங்கப் பொருளாளர் கார்த்திகேயன் கூறியதாவது:சிறுவாணி, ஆலாந்துறை, குன்னூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் உள்ளூர் காய்கறிகளின் வரத்து, தேவைக்கு குறைவாக வரும்போது, விலை அதிகரிக்கிறது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் காய்கறிகளை, எப்போதும் எதிர்பார்க்க முடியாது. தீபாவளி வரை, இன்றைய விலையில் சிறு ஏற்ற, இறக்கும் இருக்கும். அதற்குப் பின், முகூர்த்த நாட்கள் வருவதால், அத்தியாவசிய காய்கறிகளான தக்காளி, வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும். அப்போது விலையில் மாற்றம் இருக்கும், என்றார்.

Post a Comment