வெங்காயம் விலை உயர்ந்தாலும், வறட்சியால் விளைச்சல்
குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி ஏற்படவில்லை. ஆண்டிபட்டி பகுதியில்,
சித்தையகவுண்டன்பட்டி, சித்தார்பட்டி, சொக்கத்தேவன்பட்டி, சுந்தரராஜபுரம்,
பாலக்கோம்பை, ஆவாரம்பட்டி, சேவாநிலையம் உட்பட பல கிராமங்களில் வெங்காய
சாகுபடி உள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெங்காய உற்பத்தி அதிக அளவில்
இருந்தது.
அதிக வரத்தால் வெங்காய விலை கிலோ ஆறு ரூபாய் வரை குறைந்தது. இதனால் வெங்காயம் சாகுபடி செய்த பல விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தொடர்ந்து விளைச்சல் குறைந்ததால், வெங்காய விலை படிப்படியாக உயர்ந்தது. ஆண்டிபட்டி பகுதியில் ஏற்பட்ட வறட்சியால், விவசாயிகள் பலரும் வெங்காய சாகுபடியை தவிர்த்தனர்.தற்போது வெங்காய விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
ஆண்டிபட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம், மதுரை மார்க்கெட்டில்கிலோ 25 முதல் 30 ரூபாய் வரை விலை போகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி பகுதியில் 20 டன் அளவில் இருந்த வெங்காய விளைச்சல், தற்போது 10 டன் அளவுக்கு குறைந்து விட்டது.விலை இருந்தும் உற்பத்தி செய்ய முடியாத விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மைசூரு, பெங்களூரு பகுதியில் இருந்தும் தமிழகத்திற்கு தற்போது வெங்காய வரத்து இல்லை. அதனால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Post a Comment