நாடு முழுவதும் சந்தைகளுக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த
வாரத்தைவிட விலை மேலும் சரிந்துள்ளது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம்,
ராஜஸ்தான், கர்நாடகா மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி
செய்யப்படுகிறது.
அந்த மாநிலங்களில் இப்போது வெங்காய அறுவடை அபரிமிதமாக உள்ள நிலையில், தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களுக்கு வெங்காயம் அதிகளவில் அனுப்பப்படுகிறது. அதேநேரம், தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களிலும் பயிரிடப்பட்ட சாகுபடி பரப்பில் வெங்காயம் அறுவடையாகி வருவதால் உள்ளூர் சந்தைகளுக்கு சொந்த மாநில வெங்காயமும் வந்து சேர்கிறது. எனவே, சப்ளை அதிகரித்துள்ள அதேநேரத்தில் தேவை குறைந்துள்ளது.
எனவே, வெங்காயம் விலை இந்த வாரமும் சரிந்துள்ளது. நாசிக், புனே, அகமதுநகர் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வெங்காய லாரிகள் சொந்த மாநிலத்தில் அறுவடையாகும் வெங்காயமும் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. உயர்ரகம் குவின்டால் ரூ508 ஆகவும், மிக குறைந்த தரம் ரூ162 ஆகவும் கொள்முதல் ஆகிறது.
சராசரி விலையாக ஒரு குவின்டால் வெங்காயம் ரூ380 விலை போகிறது. எனவே, மொத்த விலையில் கிலோ ஸி8க்கு குறைவாக விற்பனையாகிறது என்று மொத்த வர்த்தகர்கள் ஒருவர் தெரிவித்தார். எனினும், மகாராஷ்டிரா உட்பட வட மாநிலங்களின் சில பகுதிகளில் மழை தொடங்கியுள்ளதால் அடுத்த 2 வாரங்களில் வெங்காயம் வரத்து குறைந்து விலை உயரக்கூடும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment