வெங்காயம் ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி

Thursday, 10 May 20120 comments

                  சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்து 15 லட்சத்து 48 ஆயிரத்து 254 டன்னாக அதிகரித்துள்ளது. இது, நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் (157.48 லட்சம் டன்) 9.8 சதவீதமாகும்.முந்தைய 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் வெங்கயம் உற்பத்தி, 151.17 டன்னாக இருந்தது. இதில், 8.9 சதவீதம், அதாவது 13 லட்சத்து 40 ஆயிரத்து 772 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது.நிலையற்ற கொள்கைசர்வதேச சந்தையில் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருவதும், உற்பத்தி அதிகரிப்பும், அதன் ஏற்றுமதியை அதிகரிக்க துணை புரிந்துள்ளது.

          உள்நாட்டில் வெங்காயம் அமோகமாக விளைந்த போதிலும், அதற்கேற்ப ஏற்றுமதி இல்லை. ஏனெனில்,வெங்காய ஏற்றுமதி தொடர்பான மத்திய அரசின் தெளிவற்ற கொள்கை மற்றும் வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, மிக அதிகமாக நிர்ணயித்தது ஆகியவையே காரணம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.மத்திய அரசு, கடந்த ஆண்டு செப்டம்பரில் வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்கிய போதிலும், அதன் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை, டன்னுக்கு 475 டாலராக நிர்ணயித்தது.@காரிக்கைஇதை குறைக்க வேண்டும் என விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

               இதையடுத்து, வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை, மத்திய அரசு பல கட்டங்களாக, படிப் படியாக குறைத்தது.இறுதியாக, நடப்பு மே மாதம் 2ம் தேதி வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ரத்து செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதனால், நடப்பு நிதியாண்டில் வெங்காயம் ஏற்றுமதி உயரும். விவசாயிகளும் ஊக்கத்துடன் வெங்காய சாகுபடி மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியா, வெங்காய ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்தது. சர்வதேச சந்தையில், சீனா, எகிப்து ஆகிய நாடுகளின் தீவிர போட்டியால், தற்போது இந்தியா, பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

                   சீனாவின் தரக் கட்டுப்பாடு தொடர்பான உத்தரவு குறித்து, கடந்த ஓராண்டாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது. தடை உத்தரவு அமலுக்கு வர இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், இப்பிரச்னைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியம் என, இத்துறை சார்ந்த ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media