தமிழக முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில்
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும்
விவசாயிகள் மகசூல் குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும் விதை மூலம்
சாகுபடி செய்து ஊக்கப்படுத்தும் வகையில் அரசு மானியம் வழங்கினால் சின்ன
வெங்காயம் பயிர் செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள் என தமிழக முதல்வரிடம்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது கோரிக்கை விடுத்து பேசினார்.
கலெக்டரின்
கோரிக்கையை ஏற்று கொண்ட தமிழக முதல்வர் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன
வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் வருவாயை பெருக்கிடும் வகையில் அதிக லாபம்
ஈட்டக்கூடிய கோ-5 ஆயிரம் ஹெக்டேரில் சின்ன வெங்காயம் பயிரிட ஹெக்டேர்
ஒன்றுக்கு 12 500 ரூபாய் மதிப்புள்ள அதிக விளைச்சல் தரக்கூடிய கோ-5 சின்ன
வெங்காய விதை மற்றும் உரம் உள்ளிட்ட இடு பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கிட
உத்தரவிட்டார்.
சின்ன வெங்காய விதையை நேரடியாக
சாகுபடி செய்யும் பழைய முறையிலான வெங்காய விவசாயத்தில் விதைக்கான செலவு
மிகவும் அதிகமானதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காத சூழ்நிலை நிலவியது.
புதிய முறையில் உயர் விளைச்சல் தரக்கூடிய கோ-5 வெங்காய விதைகளை நாற்றங்கால்
விட்டு சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு சாகுபடி செலவு குறைவாக
ஏற்பட்டதுடன் விளைச்சலும் இரண்டு மடங்கு ஏற்பட்டது. அந்த வகையில் 25
விவசாயிகளுக்கு விதை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இவ்வாறு
வெங்காய சாகுபடி செய்து அதிக மகசூல் அடைந்த ஆலத்தூர் பஞ்சாயத்து
யூனியனுக்குட்பட்ட இரூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்லதுரை மாவட்ட
கலெக்டரை சந்தித்து கோ-5 சின்ன வெங்காயம் விதை மூலம் பயிர் சாகுபடி செய்து
அதிக லாபம் அடைய செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழக
அரசின் வழிகாட்டு தலுக்குட்பட்டு சின்ன வெங்காயம் சாகுபடி செய்து அதிக
லாபமடைந்த விவசாயி செல்லதுரையை பாராட்டிய பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ்
அகமது மேற்கண்ட புதிய வகை சாகுபடி மூலம் சின்ன வெங்காயம் பயிரிட்டு அதிக
லாபமடையுமாறு விவசாயிகளை கேட்டு கொண்டுள்ளார். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
Post a Comment