கோ-ஆன் 5 சின்ன வெங்காயம் சாகுபடி விவசாயிகளுக்கு கலெக்டர் "அறிவுரை'

Friday, 4 May 20120 comments

பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் வைகாசி பட்டத்தில் விதை மூலமாக கோ-ஆன் 5 சின்ன வெங்காயம் நாற்று விட்டு சாகுபடி செய்ய புதிய தொழில்நுட்பத்தை கடைபிடிப்பதன் மூலம் சின்ன வெங்காயத்தில் மகசூலை 3.5 டன்னிலிருந்து 7-7.5 டன்னாக உயர்த்த முடியும்.

 தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் உயர் தொழில்நுட்ப உற்பத்தி அதிகரித்தல் திட்டத்தின்கீழ் 1000 எக்டர் இலக்கீடு பெற்று ஒரு எக்டருக்கு அரசு மான்யம் ரூ.12,500க்கு விதைகள் மற்றும் உரம் மான்யத்தில் ஏற்கனவே தேர்வு செய்த 2,750 விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.விதை வழங்கப்பட்ட விவசாயிகள் தற்போது நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். நாற்றில் களைகள் இல்லாமல் இருக்க 2-3 முறை நிலத்தை உழுது நீர்பாய்ச்சி களைகளை அழிக்க வேண்டும்.

வைகாசி மாதம் கோ-ஆன் 5 என்ற உயர் விளைச்சல் தரக்கூடிய ரகத்தை நாற்றுவிட்டு 40-45 நாள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஓர் ஏக்கருக்கு நடவு செய்ய ஒரு கிலோ விதை போதுமானது. விதையை 5 சென்ட் நிலத்தில் மூன்றடி அகலத்தில் மேட்டு பாத்திகள் அமைத்து 200 கிலோ மண்புழு உரமிட்டு நிலம் தயார் செய்ய வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு உயிர் பூஞ்சான கொல்லி டி.விரிடி 4 கிராம், சூடோமோனாஸ் 10 கிராம், உயிர் உரங்கள் ஆஸோஸ்பைரிலம் 4 கிராம், பாஸ்போ பாக்டீரியா 4 கிராமுடன் உயிர் வேர் உட்பூசனம் 10 கிராம் விதைப்புக்கு முன்பு கலந்து தயார் செய்யப்பட்டுள்ள நாற்றங்காலில் ஒரு சீராக விதைப்பு செய்யவும்.

பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைப்பு செய்த 40-45 நாள்வரை காலை மாலை இரண்டு வேளையும் மண் நன்றாக நனையும்படி நீர் தெளிக்க வேண்டும். விதைப்பு செய்த பின்பு நாற்றங்காலை போர்வையாக வைக்கோல் பரப்பி மூட வேண்டும்.

ஒரு வாரத்துக்கு பின் நாற்று முளைக்கும் வைக்கோலை எடுத்துவிட வேண்டும். நடவு வயல் நன்றாக உழவு செய்து மண்ணை நன்றாக ரொட்டோவேட்டர் கொண்டு கட்டிகளை உடைத்து தூள் மண்ணாக்க வேண்டும். கடைசி உழவில் தொழுஉரம் ஏக்கருக்கு 5-டன் இட வேண்டும்.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media