கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல் கலைக் கழகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டின்
வெங்காய சாகுபடி பரப்பில் தமிழ் நாடு ஐந்து சதவீதம் பங்கு வகிக்கிறது.
இதில் 70 சதவீதம் சின்ன வெங்காயம் பயிரிடப் படுகிறது. பெல்லாரி எனப்படும்
பெரிய வெங்காயத்தின் உற்பத்தி 30 சதவீதம் தான் உள்ளது.
வடமாநிலங்ககளிலிருந்து குறைந்த விலைக்கு பெரிய வெங்காயம் வருவதாலும்,
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் பெரிய வெங்காயத்தின் இருப்பு வைக்கும்
தன்மை குறைவாக உள்ளதாலும், விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடவே
விரும்புகின்றனர்.
தற்போது பெரம்பலூர், திண்டுக்கல்
மற்றும் தூத்துக்குடி மாவட் டங்களிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வந்து
கொண்டிருக்கிறது. இம்மாத இறுதியிலிருந்து கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்து
வரத்து தொடங்கிவிடும்.
தற்போது அறுவடையாகி வரும்
சின்ன வெங்காயத்தை உடனே விற்கலாமா அல்லது இருப்பு வைக்கலாமா என்ற
விவசாயிகளின் சந்தேகத்திற்கு தீர்வு சொல்ல, தேசிய வேளாண்
புதுமைத்திட்டத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் அடுத்த
மூன்று மாதங்களுக்கு வெங்காயத்திற்கு என்ன விலை கிடைக்கும் என்பதை
ஆராய்ந்து ஆய்வு முடிவுகளின்படி நல்ல தரமான சின்ன வெங்கா யத்திற்கு
விவசாயிகளுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு குவிண்டாலுக்கு ரூ. 1900 முதல்
ரூ. 2400 வரை கிடைக்கும் எனத்தெரிய வருகின்றது.
எனவே
விவசாயிகள் மேற்கூறிய விலை கிடைத்தால் இருப்பு வைக்காமல் உடனே
விற்றுவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெரிய (பெல்லாரி) வெங்காய
விலையை அடிப்படையாக கொண்டு அமல்படுத்தியுள்ள ஏற்றுமதித்தடை நீக்கப்
பட்டால், சின்ன வெங்காயத் தின் விலை கிலோவிற்கு ரூ. 2-3 வரை அதிகரிக்க
வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Post a Comment