நெல்லை மாவட்டத்தில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதியில் குறைந்த அளவே
வெங்காயம் மகசூல் கிடைத்துள்ளது.
இதனால் மதுரையில் இருந்து வெங்காயம்
விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு
விளாத்திகுளம் பகுதியில் வெங்காய மகசூல் அமோகமாக இருந்ததால் ஒரு கிலோ
வெங்காயம் ரூ.5 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்பனையானது.
அதன் பிறகு படிப்படியாக விலை உயர்ந்து தற்போது தரம் வாரியாக ரூ.35 முதல்
ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் வரை ரூ.55க்கு
விற்கப்பட்ட ஒரு கிலோ மிளகாய் ரூ.10 குறைந்து ரூ.45க்கு விற்பனை
செய்யப்படுகிறது
Post a Comment