வெங்காயம் விலை உயர்ந்தது

Friday, 14 December 20120 comments

     உள்நாட்டில், பருவ மழை குறைந்ததால், வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் விலை, குவிண்டாலுக்கு, 925 ரூபாயாக அதிகரித்துள்ளது.நம் நாட்டில், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், அதிக அளவில் வெங்காயம் உற்பத்தியாகிறது.

      அண்மையில் முடிவுற்ற கரீப் பருவத்தில், இம்மாநிலங்களில் காலதாமதமான மற்றும் குறைந்த மழைப் பொழிவால், வெங்காயம் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது.இதனால், வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாசிக் மற்றும் அதை சுற்றியுள்ள சந்தைகளுக்கு, உயர்ரக வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.நேற்று முன்தினம், நாசிக் சந்தைக்கு, 1,100 டன் அளவிற்கே வெங்காயம் வரத்து இருந்தது. இதன் விலை, குவிண்டாலுக்கு, 925 ரூபாய் வரை விலை போனது.

      அதேசமயம், கடந்த 3ம் தேதி, ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 540 ரூபாய் என்ற அளவில் இருந்தது.மேலும் மலேசியா, வளைகுடா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, நம் நாட்டிற்கு, வெங்காயம் வேண்டி ஆர்டகள் குவியத் துவங்கியுள்ளன. இதுவும், வெங்காயம் விலை உயர்விற்கு காரணமாகும்.எனவே, வரும் நாட்களில் வெங்காயம் விலை மேலும் உயரக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media