ஆடிப்பட்டத்தில் சின்ன வெங்காய சாகுபடி

Friday, 14 December 20120 comments

                ஆடிப்பட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தால், அறுவடையின் போது விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்

                  தமிழகத்தில் ஆடிப்பட்டத்தில் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை மானாவரி பயிர்களின் உற்பத்தியை தீர்மானிக்கிறது.நடப்பாண்டு பருவமழை இயல்பாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டை விட, நடப்பாண்டு சின்ன வெங்காய உற்பத்தி அதிகளவில் இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

              நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை ஒரு கிலோவுக்கு ஏழு ரூபாய் முதல் 12 ரூபாய் என இருந்தது. கடந்த மாதத்தில் வெளிநாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டதால், பண்ணை விலை சற்று உயர்ந்தது. சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை ஒரு கிலோவுக்கு 19 ரூபாய் முதல் 22 ரூபாய் வரையிலும், நடவு காயின் விலை ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையிலும் உள்ளது.

            வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்காக சந்தையில் விற்பனை செய்ய ஆடிப்பட்டத்தில் சின்ன வெங்காயத்தை நடவு செய்யலாமா அல்லது வேண்டாமா என்ற மனநிலையில் விவசாயிகள் உள்ளனர். விலை ஆய்வுகளின்படி வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்யலாம்.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media