வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Wednesday, 5 December 20120 comments

வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஆண்டிபட்டி பகுதி விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆண்டிபட்டி பகுதியில் சித்தயகவுண்டன்பட்டி, ஏத்தக்கோயில், சித்தார்பட்டி, சேவாநிலையம், ராஜதானி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, அழகாபுரி,ராயவேலூர் உட்பட பல கிராமங்களில் வெங்காய சாகுபடி நடக்கிறது. கடந்த சில மாதங்களாக வெங்காய விலை தொடர்ந்த உயர்ந்து வருகிறது. தற்போது கிலோ 50 ரூபாயை கடந்து விட்டது.
பருவ மழை காலங்களில் வெங்காயம் நடவு செய்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால், அக்டோபர்,நவம்பர் மாதங்களில் வெங்காய நடவு செய்வதை விவசாயிகள் தவிர்த்து விடுவர்.

இந்த ஆண்டில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால், ஆண்டிபட்டி பகுதியில் இறவை பாசன விவசாயிகள் பலரும் வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். வெளியூர்களில் இருந்து விதை வெங்காயம் வாங்கி வந்து தரம் பிரித்து விதைப்பு பணிகளுக்கு தயாராகி வருகின்றனர்.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media