வெங்காயத்தின் விலை கடுமையாக சரிவடைந்துள்ளதால் நெல்லையில் கிலோ
ரூ5க்கு வெங்காயம் கிடைக்கிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும்,
உற்பத்தியாளர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததால் மத்திய அரசு கவிழ்ந்த
காலம் உண்டு. ரூ.100 கொடுத்தாலும் ஒரு கிலோ கிடைக்காத அளவுக்கு
தட்டுப்பாடு இருந்தது. உணவகங்களில் கூட வெங்காயம் இல்லை என போர்டு
வைக்கப்பட்டது. முட்டை ஆம்லெட்டில் வெங்காயத்துக்கு பதில் முட்டைகோஸ்
பயன்படுத்தியதையும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக காணமுடிந்தது.
இன்றோ நிலைமை தலைகீழ்...
திருநெல்வேலி சந்தைகளில் வெங்காயம் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விளைச்சல் போக வெளிமாநிலங்களில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளது.
விலையேற்றத்தை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் பயிரிட்ட செலவுக்கு கூட
வழியின்றி கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு வரை பல்லாரி கிலோ ரூ.15க்கு
விற்பனையானது.
தற்போது ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. மொத்த விற்பனைக் கடைகளில்
இன்னும் சற்று விலை குறைவாக கிடைக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.20க்கு விற்ற சின்ன வெங்காயம்
தற்போது கேட்பாரற்று கிடக்கிறது.
Post a Comment