விலை வீழ்ச்சிவெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை

Sunday, 12 February 20120 comments

வெங்காயம் விலை வீழ்ச்சியால் கோபி சுற்று வட்டாரத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. பவானிசாகர் அணையின் மூலம் எல்.பி.பி., தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசனங்கள் மற்றும் குண்டேரிப்பள்ளம் அணை பாசனத்தில், பல ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகியவை பயிரிடப்படுகின்றன.

வாழை, மஞ்சள் ஆகிய பயிர்களில் ஊடுபயிராக வெங்காயம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கோபி சுற்று வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ளது.

கொங்கர்பாளையம், வினோபா நகர்,
 பங்களாபுதூர் சுற்று வட்டாரத்தில் வெங்காயம் தனிப்பயிராகவும் பயிரிடப்பட்டுள்ளது. வெங்காயம் அறுவடை சீஸன் துவங்கியதால், வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெங்காய விவசாயி கூறியதாவது:
ஒரு ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்ய 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. வெங்காயம் அறுவடை செய்ய 10 கிலோ கொண்ட ஒரு கூடைக்கு 30 ரூபாய் வரை கூலி தரப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் மொத்த விலையில் ஆறு முதல் ஏழு ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.

பயிரிடப்பட்டதற்கான கூலியை மட்டுமே எடுக்க முடிகிறது. ஒரு சில இடத்தில் பயிருக்கான முட்டுக்கூலி கூட எடுக்கமுடியவில்லை. வெங்காயம் விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media