செம்பட்டி பகுதியில் வெங்காயம் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒரு கிலோ வெங்காய விதை 50 ரூபாய்க்கு விவசாயிகள் வாங்கி, நடவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், நடுப்பட்டி, அம்பாத்துரை, கலிக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, செட்டியபட்டி, ஆதிலெட்சுமிபுரம், வக்கம்பட்டி, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் வெங்காயம் நடவு செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு மழை மற்றும் நோய் தாக்குதலால் வெங்காயம் நடவு செய்வதை விவசாயிகள் விட்டுவிட்டனர். மேலும், நடவு செய்த தோட்டங்களில் விலையில்லாததால், வெங்காயத்தை பறிக்காமலேயே டிராக்டர் மூலம் உழுதுவிட்டனர்.
இந்த ஆண்டு நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் வெங்காயத்தை நடவு செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, செம்பட்டி அருகே உள்ள பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, குரும்பபட்டி ஆகிய பகுதிகளில் ஆயிரகணக்கான ஏக்கர்களில் தீவிரமாக வெங்காயத்தை விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர்.
இது குறித்து, நடுப்பட்டி பகுதி விவசாயி சிவக்குமார் கூறுகையில், இந்தாண்டு ஆரம்பத்திலேயே வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்தது. அதே விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில், இப்பகுதி விவசாயிகள் வெங்காயத்தை நடவு செய்து வருகின்றனர்.
3 மாத பயிரான வெங்காயம் தை மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு விற்பனையாகும் என்றார்.

Post a Comment