நெல்லை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத¢தால்
வெங்காயம் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டம், கீழப்பாவூர்,
மேலப்பாவூர், நாகல்குளம், அரியகுளம், சுரண்டை, வீ.கே.புதூர் ஆகிய
பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெங்காயம் சாகுபடி
செய்யப்படுகிறது.
உள்ளூரில் வெங்காய உற்பத்தி இல்லாத காலத்தில் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தினமும் லாரிகளில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆந்திரா, கர்நாடாகாவிலும் வெங்காய விளைச்சல் அதிகம் காரணமாக கடந்த மாதம் வரை ஒரு கிலோ வெங்காயம் ரூ.8 முதல் 10 வரை கடைகளில் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் வெள்ளததால் வெங்காய தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இருப்பு வைத்திருந்த வெங்காயமும் கன மழை காரணமாக அழுகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வெங்காய வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு வாரத்தில் பல்லாரி விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து நெல்லை வியாபாரிகள் கூறியது: நெல்லைக்கு தினமும் 25 டன் வெங்காயம் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்தது. இதனால் கடந்த மாதம் வரை ஒரு க¤லோ வெங்காயம் ரூ.8க்கு விற்கப்பட்டது. தற்போது வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதனால் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.24 முதல் 28 வரை விற்கப்படுகிறது. தட்டுப்பாடு அதிகரித்தால் மேலும் விலை உயரும் என்றனர்.

Post a Comment