வெங்காயம் சாகுபடி பாதிப்பு :விலையும் உயர்ந்தது

Monday, 6 August 20120 comments

                உடுமலை சுற்றுப்பகுதிகளில் வறட்சி காரணமாக, வெங்காய சாகுபடி
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; வரத்து குறைந்ததால், விலை வேகமாக உயர்ந்து
வருகிறது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு
முழுவதும் பல்வேறு சீசன்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது.

                சீசன் சமயங்களில் உள்ளூர் சந்தைகளுக்கு வரத்து அதிகமாக இருக்கும்போது,
வெளிமாவட்டங்களுக்கு சின்ன வெங்காயம் அனுப்பப்பட்டு வந்தது.
சில மாதங்களுக்கு முன், சின்ன வெங் காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
விதித்த நிலையில், விலை கடுமையாக சரிந்தது. பறிக்கும் கூலிக்கு கூட
கட்டுப்படியாகாத விலை நிலவரம் இருந்தது; விவசாயிகள் விளைநிலங்களில் சின்ன
வெங்காயத்தை பறிக்காமல் விட்ட அவல நிலை ஏற்பட்டது.

               இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் ஜூன் மாதம் சின்ன வெங்காய சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது. குறுகிய பரப்பில் பயிரிடப்பட்ட
சாகுபடியும் போதிய தண்ணீர் இல்லாமல் விளைச்சல் குறைவாக இருந்தது.
இதனால், உள்ளூர் சந்தைகளுக்கு வரத்து வெகுவாக குறைந்து விலை வேகமாக
உயர்ந்தது. ஏப்., மாத துவக்கத்தில் கிலோ 16 ரூபாய் என்றளவில் இருந்த விலை
தற்போது 40 ரூபாயை தொட்டுள்ளது. போதிய சாகுபடி இல்லாததால் விலை மேலும்
அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கிராக்கி அதிகரித்துள்ளதால்
கிணற்றுப்பாசனத்துக்கு பயிரிட்டு அறுவடை செய்து வரும் விவசாயிகள் சின்ன
வெங்காயத்தை இருப்பு வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.


Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media